ஒன்றாகப் பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ சாய்ந்தமருதில் விவசாய உற்பத்தி கருத்தரங்கு
(எம்.எஸ்.எம்.ஸாகிர், ஏ.பி.எம்.அஸ்ஹர்)
‘ஒன்றாகப் பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் விவசாய உற்பத்தி கருத்தரங்கொன்று இன்று (27) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சபீகாவின் ஒருங்கிணைப்பில், பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆவிகா ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விவசாய போதானாசிரியர் எஸ்.பஸ்ரின் வளவாளராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றுவதற்கான ஆலோசனைகள் கலந்து கொண்ட வளவாளர்களால் வழங்கப்பட்டு, கத்தரி, மிளகாய், முளைக்கீரை, வெண்டிக்காய் போன்ற பயிர்களின் விதைகளும் தெரிவு செய்யப்பட்ட கலைஞர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், வீட்டுத்தோட்டம் செய்பவர்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



கருத்துக்களேதுமில்லை