கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகினால் நாடு சுபீட்சமாகும் – இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்ணுகாந்தன்!!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகினால் நாடு சுபீட்சமாகும் என்பதை யாரும் மறந்திவிட வேண்டாம் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இன்று (02) திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நாடு நாட்டின்டைய மக்கள் பாரியதொரு மரணப்படுகுளியை எதிர்நோக்கிக்கொண்டு இருக்கின்றோம். அந்தவகையில் இந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஏன் எமது மக்களை வதைக்கின்றார் என்பது இன்னமும் மக்களுக்கு புரிந்துகொள்ள முடியிததொரு துர்ப்பாக்கிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இந்த ஜனாதிபதியின் திட்டம் என்ன? திட்டத்தை கொண்டு நடாத்துவதற்கு இன்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களை அவர் ஏற்படுத்தியிருக்கின்றார். மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் பிரதமர் ஊடாக மக்களுக்கு ஏதோ நன்மை கிடைக்கும் என்று, ஆனால் எமக்கு தெரிந்த வகையில் பல தடவைகள் பிரதமராக இருந்த படியினால்தான்  அந்த பிரதமர் பதவியை வழங்கியதாக கடந்த மாதம் 3 ஆம் திகதி விஜயதாச ராஜபக்ஸ அவர்கள் 21 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக கலந்துரையாட எனது தலைமையில் அனைத்து கட்சிகளும் சென்றிருந்தோம் அப்போது அவருடன் போசும்போது இதனை கூறியிருந்தார்.
ஆனால் இதற்குள் என்ன சூட்சி நடக்கின்றது என எமது மக்களுக்கு இன்னமும் தெரியவில்லை. ஜனாதிபதி தன்னை நல்லவராக காட்டுவதற்கு அங்கே பிரதமரை நியமித்தாரா? இல்லை இந்த நாட்டு மக்களை குளிதோண்டி புதைப்பதற்கு பிரதமரை நியமித்தாரா என்று இன்னம் தெரியவில்லை. நிச்சயமாக பிரதமர் அந்த பதவியில் இருந்து கொண்டு வெளிநாடுகளில் இருந்து நன்மைகளைப் பெற்றுக்கொடுத்தால் அந்த பெயர் ஜனாதிபதிக்கு போய்விடும் என்று சொல்லி தன்னுடைய ஆட்சியை கொண்டுவருவதற்கு பிரதமரும் கண்மூடித்தனமாக இருக்கின்றாரா என சந்தேகிக்க தோன்றுகின்றது.
எமது நாட்டில் imbeach எனும் விடயம் நடைமுறைப்படுத்தப்படுமானால், (குற்றங்களை குற்றப்படுத்துதல்) உயர் பதவியில் இருப்பவர்களைப்பற்றி குற்ற மேலிடத்தில் குற்றம் சாட்டுதலே im beach ஆகும். இலங்கையில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் ஒன்றினைக்கு ஜனாதிபதிக்கு எதிராக இந்த நடைமுறை செயற்பாட்டை கொண்டுவர முன்வர வேண்டும்.
வெள்ளம் தலைமேல் போய்க்கொண்டிருக்கின்றது, அதை உடனே தடுத்து நிறுத்தி இலங்கையை பாதுகாக்க முன்வரவேண்டுமென்று எமது நாட்டின் சட்டத்தரணிகளிடம் நான் கோரிக்கை ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றேன்.
எமது நாட்டில் இருந்த மேல் சபையை இன்று இல்லாமல் செய்துவிட்டார்கள். மேல்சபையை தீர்மானிப்பது கீழ்ச்சபை, கீழ்சபை என்பது பாராளுமன்றம். ஜனாதிபதி ஒரு சிலரையும் பிரதமர் ஒரு சிலரையும் இந்த மேல் சபைக்கு தீர்மானிப்பார்கள். காலப்போக்கில் இந்த மேல் சபை இலங்கையில் இருக்குமானால் அதனூடாக பல அரசியல்வாதிகளினுடைய அரசியல் நிறுத்தப்படும் என்பது தெரிந்து அந்த மேல் சபையை இல்லாமல் செய்துவிட்டார்கள். எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட மேல் சபையில் அருண் தம்பிமுத்துவினுடைய அப்பப்பா கூட இந்த மேல் சபையில் இருந்ததாக அறிகின்றேன். இந்த காலகட்டத்தில் நாம் வாய்ப்பேச்சோடு நிறுத்திவிடாமல் மக்களுடைய நலன் கருதி ஜனாதிபதி பதவி துறந்தாலே தவிர இந்த நாட்டு மக்களுக்கு விடுதலையும் சூபீட்சமும் வரும். அப்படி இல்லையென்றால் இந்த நாட்டு மக்கள் இன்னமும் பசி பட்டினியுடன் தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இந்த நாடு ஒரு பாரிய பஞ்சத்திற்கு மத்தியிலும் பலதரப்பட்ட வியாதிகளுக்கு மத்தியிலும் தள்ளப்பட்டுவிடும் என்பதை மறந்துவிட முடியாது.                       இலங்கை மக்கள் வாழ வேண்டுமென இந்த ஜனாதிபதி தன்னுடைய மனதில் எடுத்துக்கொள்வாராக இருந்தால் உடனடியாக அவருடைய பதவியை அவர் துறந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் மக்களாக ஒன்றினைந்து imdeach ஊடாக இந்த ஜனாதிபதியை பதவி இறக்கினாலே ஒழிய இந்த நாட்டிற்கு விடுதலை கிடைக்காது.
இலங்கையில் தற்போது அரிசி உற்பத்தி குறைந்து போகின்றது. சில அரிசி எட்டாயிரம் வரைக்கும் விலை போகின்றது. இப்படி இருக்கும் போது இந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு முதல் முதலில் விவசாயிகளிடம் இந்த அரசாங்கம் கை வைத்ததே காரணமாக அமைந்துள்ளது.
இனிமேல் இந்த நாட்டில் குடும்ப ஆட்சி தேவையில்லை, ராஜபக்ஷ குடும்பம் பாரிய மோசடியை செய்துள்ளது. இதை இந்த குடும்பம் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
எங்களுடைய இலங்கை மக்கள் தேசிய கட்சி பகிரங்கமாக மக்களிடத்தில் மன்னிப்புக்கோருகின்றது, காரணம் இந்த குடும்ப ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்ததுடன், நாம் பொதுஜன பெரமுணவோடு ஒப்பந்தம் கைச்சாத்திட்டு பங்காளிக் கட்சியாக இருந்ததற்கும், மக்களை வாக்களிக்க தூண்டினோம், மக்களும் மனப்பூர்வமாக வாக்களித்தார்கள். அவ்வாறு மனப்பூர்வமாக வாக்களித்தமைக்கு இந்த ஜனாதிபதி மக்களை பசியோடும் பட்டினியோடும் நடுத்தெருவில் விட்டுள்ளார் என்பதை நினைத்தால் வேதனையாகவுள்ளதென தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்