ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை நீடிக்க தீர்மானம்

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் பணியாற்றும் வெளிவாரி மற்றும் ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அந்த பணியாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்கும் வாய்ப்பு நிறுவன பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்