தற்போது அரசுக்கெதிராகப் போராடும் மக்களை அச்சப்பட வைப்பதற்காகவே அரசாங்கத்தினால் புலி நாடகம் அரங்கேற்றம்… (புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் – க.இன்பராசா)

(சுமன்)

விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி தற்போது அரசுக்கெதிராகப் போராடும் மக்களை அச்சப்பட வைப்பதற்காகவும் அதற்காக அவர்களே ஏதேனும் செய்து விட்டு விடுதலைப் புலிகள் மீது பழிகளைச் சுமத்திவிடும் நோக்கோடும் இவ்வாறான செய்தியை அரசாங்கம் வெளியிட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கத் தோணுகின்றது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.

ஜுலை 05 மற்றும் 06ம் திகதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பினால் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்;பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜுலை 05 கரும்புலிகள் தினம் அத்தினத்திலும் 06ம் திகதியும் விடுதலைப் புலிகள் குண்டுத் தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக அபாண்டமான பொய் வதந்தியை எடுத்து பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மக்கள் மத்தியில் ஒரு பீதியை உண்டாக்கும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் கதையொன்றைக் கட்டவிழ்த்துள்ளது.

விடுதலைப் புலிகளினால் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற கருத்து முற்று முழுக்க பொய்யன கருத்து. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தினை ஏற்படுத்தி எமது மக்களை இன்னும்; அதள பாதாளத்திற்குக் கொண்டு செல்வதற்கு தமிழ் மக்கள் சார்பில் எவரும் இல்லை என்பதனை விடுதலைப் புலிகள் கட்சியினராகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2009ம் ஆண்டு எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு முன்னாள் போராளிகள் ஆகிய நாங்கள் ஜனநாயக ரீPதியில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்திருக்கின்றோம். இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகள் மீள உருவாகப் போகின்றார்கள் என இலங்கை அரசு மாத்திரமல்லாhது இந்திய அரசு கூட கடந்த சில மாதங்களின் முன்னர் கருத்து வெளியிட்டிருந்தது. இதனை மறுத்தும் நாங்கள ஒரு கண்;டன அறிக்கையை வெளியிட்டிருநதோம்.

உண்மையிலேயே இலங்கை அரசும், இந்திய அரசும் விடுதலைப் புலிகளை வைத்து பந்தாடிக் கொண்டிருக்கின்றார்கள. விடுதலைப் புலிகள் இல்லாவிட்டால் அவர்களுக்கு எவ்வித அரசியற் செயற்;பாடுகளையும் முன்நகர்த்த முடியாமல் இருக்கின்றார்கள். எனவே ஜீலை 05, 06ம் திகதிகளில குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் nவிளியிட்ட தகவலுக்காக நாங்கள் எங்கள் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இலங்;கை மக்கள் அனைவருக்கும் எமது கட்சியின் சார்பில் வேண்டுகோளையும் முன் வைக்கின்றோம். எக்காலத்திலும் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி தற்போது அரசுக்கெதிராகப் போராடும் மக்களை அச்சப்பட வைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறானதொரு செய்;தியை இலங்கை அரசாங்கம் மக்கள் மத்தியில் வெளியிட்டிருக்கின்றது.

இன்று வடக்கு கிழக்கிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் பன்னிரண்டாயிரத்துக்கும் மேல் இருக்கின்றார்கள். அவர்;கள் எமது மக்களின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்து இன்று அப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு இன்றைய நிலையில் தாயகத்தில் தங்கள் குடும்பங்களையும் தங்களையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் அபாண்டமானதொரு பொய்யை வெளியிட்டு அவர்களை அச்சப்படுத்தி மீண்டும் மீண்டும் இவ்வாறானதொரு கட்டுக் கதைகளைக் கட்டிவிட்டு அவ்வாறானதொரு நிலைக்கு அவர்களை மீண்டும் தள்ளிவிட வேண்டும். அவ்வாறு செய்தால் தங்களின் சுய அரசியல் ரீதியில் முன்னேற்றத்தைக் கொண்டு செல்லாம், இதனைக் காட்டி வெளிநாடுகளில இருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டத்தின் நோக்கமே இந்த அறிக்கையில் வெளிப்படுகின்றது. இலங்கை அரசின் இந்தத் திட்டம் இனியொரு போதும் நடைபெறாது.

இவ்வாறான பொய் வதந்திகளைக் கட்டிவிட்டே இலங்கை அரசு எமது மக்கள் மீது பாரியதொரு இன அழிப்பை மேற்கொண்டது மட்டுமல்லாது எமது தமிழ் மக்கள் மீது பொருளாதாரத் தடையையும் விதித்திருந்தது. எமது தமிழ் மக்களுக்குச் செய்த கொடுமையின் நிமித்தம் இன்று கடவுளின் வழியாக இலங்கையின் மீது ஒட்டுமொத்த நாடுகளும் சேர்ந்து பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.

கோட்டா மஹிந்த அரசாங்கம் கனவிலும்; நினைத்திருக்க மாட்டார்கள் இன்று தங்களுக்கு இவ்வாறானதொரு நிலை வரும் என்று. அவர்கள் எமது தமிழ் மக்களுக்குச் செய்த பாவம் அவர்கள் தங்கள் வீடுகளில் கூட நிம்மதியாக இருக்க முடியாத அளவிற்கு அவர்கள் மக்களினாலேயே விரட்டியடிக்கப்படுகின்றார்கள்.

இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்கின்ற சிங்கள அரசு எமது தமிழ் மக்கள் மீது பல நெருக்கடிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது எமது நிலங்கள்; அபகரிப்பு, திட்டமிட்ட மீள் குடியேற்றம் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை இந்த அரசாங்கங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். கோட்டபாய வீட்டுக்குச் சென்றாலும் இனிவரும் ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் மூவின மக்களும் வாழ வேண்டும என்ற எண்ணத்தோடு செயற்பட்டால் மாத்திரமே இந்த நாட்டைக் கட்டியெழுப்பலாம்.

விடுதலைப் புலிகளைச் சொல்லி சொல்லி அரசியல் நாடகம் நடத்துவது இலங்கை அரசாங்கத்திற்குப் புதியதல்ல. எமது தமிழ் மக்களின் ஒவ்வொரு நினைவேந்தல்களின் போதும் இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்தி தமிழ் மக்களை வீட்டில் முடக்குவதோடு மட்டுமல்லாது இலங்கை அரசு அவர்களே ஏதேனும் செய்து விட்டு விடுதலைப் புலிகள் மீது  பழிகளைச் சுமத்துவதற்காகவும் இவ்வாறான செய்தியை வெளியிட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கத் தோணுகின்றது என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்