தேயிலைத் தோட்டத்தில் விறகு சேகரிக்க சென்ற தொழிலாளியை தோட்ட நிர்வாகம் விரட்டி அடித்ததால் தேயிலை மலையில் விழுந்து பரிதாப மரணம்

 

பள்ளகெவடுவ இந்தகல தோட்டத்தில் ( ஆறாம் நம்பர் பிரிவில் )விறகு சேகரிக்க சென்ற
60 வயது துரைசாமி செல்லதுரை தேயிலைத் தோட்டத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 09.30 அளவில் பள்ளகெவடுவ இந்தகல தோட்டத்தில் ( ஆறாம் நம்பர்
பிரிவில் )விறகு சேகரிக்க சென்ற சந்தர்ப்பத்தில் 60 வயது துரைசாமி செல்லதுரை
தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோர் குறித்த பிரதேசத்திற்கு
கள விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் விறகு சேகரிக்க சென்ற குறித்த நபர்
தோட்ட நிர்வாகத்தினரிடம் ஏற்பட்ட அச்சத்தால் அங்கிருந்து வீடு திரும்பும் சந்தர்ப்பத்தில்
என தேயிலை மலையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் அந்த பகுதியில் கொழுந்து
பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த
விபத்து குறித்து மரண பரிசோதனையை முன்னெடுப்பதற்கு பண்டாரவளை நீதிமன்ற
நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து இந்த உயிரிழப்பு குறித்து விசாரணைகளை
முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார் இந்த உயிர் இறப்புக்கான காரணம்
குறித்து பள்ளகெவடுவ பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தெமோதரை நிருபர்

ராஜரத்தினம் சுரேஷ்குமார் 0714551010

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்