கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் திருடர்கள் கைவரிசை!!

(-தங்கராசா ஷாமிலன்.)
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதி வீடோன்றில் இன்று (06) நள்ளிரவில் துவிச்சக்கர வண்டி மற்றும் பெற்றோல் திருடப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,
யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதி  இலங்கை வங்கியில் கடமை புரியும் (சித்தார்த்தன் தர்ஷிகா) என்பவரின் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த  மோட்டார் வண்டியில் பெற்றோல் திருட பட்டதோடு  பெறுமதிமிக்க துவிச்சக்கர வண்டி ஒன்றும் நள்ளிரவு திருடர்களால் திருடப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவம்  தொடர்பாக வீட்டின் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில்
கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த பகுதி மற்றுமொரு வீட்டில் நள்ளிரவில் திருட்டு முயற்சிகள் இடம்பெற்றமை  சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்