சமுர்த்தி திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் “துரித உணவு உற்பத்தி  திட்டம்” ஆரம்பம்.

நூருல் ஹுதா உமர்

சமுர்த்தி திணைக்களத்தினால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறைகளை தவிர்க்கும் முகமாக துரித உடனடிப் பயிர்ச்செய்கைகளை சமுர்த்தி பயனாளிகளிடம் ஆரம்பிக்கவும் விவசாயத்தில் கவனம் செலுத்தவும் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

மேற்படி வேலைத்திட்டத்தினை இறக்காமம் பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு  சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.தஸ்லீம் தலைமையில் புதன் கிழமை (06) பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு, இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.ரஷ்ஷான் (நளீமி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இத்திட்டத்தின் ஊடாக, சமுர்த்தி பயனாளிகளைக் கொண்டு பிரதேச மட்டத்தில்  இப்பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் பயிர்ச்செய்கை மூலம் விளைவிக்கக்கூடிய துரித உடனடி உற்பத்தி பயிர்செய்கைகள் இனம்காணப்பட்டு அவற்றை மேற்கொள்வதற்கான உணவுப் பயிர்ச் செய்கை, உணவுப் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் உணவுப் பண்பாட்டு மேம்பாட்டுத் திட்டம், உணவுப் பாதுகாப்பு முறைகள் போன்ற விடயங்கள் இதன் கீழ் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் கணக்காளர் றிம்ஷியா அர்சாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், சமுர்த்தி திட்ட முகாமையாளர் பிரியந்தி வேரகொட, முகாமையாளர் எஸ். செல்வகுமார், விவசாய பரிசோதகர் எஸ்.ஏ.எம்.அஸ்ஹர், சமுதாய அடிப்படை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். ஜாஹித் உட்பட சமுதாய அபிவிருத்தி உதவியாளர் ஏ.எல். ஜெமீல், திட்ட உதவியாளர் ஐ.எல்.எம். மக்பூல் சமுர்த்திப் பிரிவு ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி மகா சங்க உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்