சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

வெள்ளிக்கிழமைகளில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இந்த தீர்மானத்தை பொது நிர்வாகம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட சுகாதார நிறுவனங்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் திட்டம் 48 மணிநேர காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சுகாதாரப் பணியாளர்கள் எரிபொருளைப் பெறுவதற்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்