லிட்ரோ எரிவாயு கப்பல் இன்று நாட்டுக்கு வரும்

3,700 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று (10) நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலா 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மேலும் இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் 16 ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக லிட்ரோ நிறுவனம் 100,000 மெட்ரிக்தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதன்படி, இம்மாதத்திற்குள் 30,000 மெற்றிக் தொன் எரிவாயுவை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்