புதிய அரசை நியமிக்க எதிர்க்கட்சி தயாராக உள்ளது -சஜித் பிரேமதாச

தாய் நாட்டைப் பாதுகாக்கவும், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டை ஸ்திரப்படுத்தும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ஆணை முடிந்து விட்டதாகவும், அந்த மூன்று பிரிவுகளும் அழகிய தாய்நாட்டை அழித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை நியமிப்பதைத் தவிர வேறு மாற்றுத் தீர்வு இல்லை.

யாரேனும் அதை எதிர்த்தாலோ அல்லது பாராளுமன்றத்தில் இருந்து நாசகார நடவடிக்கை எடுத்தாலோ அது தேசத்துரோகச் செயலாகவே கருதப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்