அரச அதிபர் மாளிகை அலரி மாளிகையை கைப்பறியுள்ள போராட்டக்காரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நாளைய தினம் கோட்டாபய பதவி விலகிய பின்னர், தற்போது மக்கள் வசம் உள்ள அரச அதிபர் மாளிகை, அலரி மாளிகை மற்றும் அரச அதிபர் செயலகம் போன்ற தேசிய வளங்களை விடுவிக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அரச அதிபர் நியமனம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்படாவிடின், சிவில் செயற்பாட்டாளர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியில் அதனை முன்மொழியத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவர்இவ்வாறு தெரிவித்துள்ளார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.