பாகிஸ்தான் மண்ணில் தங்கம்!! ஈழத்தமிழ் மங்கையின் சாதனை

பாகிஸ்தானில் நடைபெற்ற சவாட் சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த கந்தசாமி டிலக்சினி தங்கப் பதக்கத்தினை வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் இலங்கையில் இருந்து 4 ஆண்கள் 9பெண்கள் என 13 போட்டியாளர்கள் பங்குபற்றினர். இதில் 9 பேர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளதுடன் 4 பேர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

கந்தசாமி டிலக்சினி க.பொ.த சாதாரண தரம் வரையில் இறைம்பைக்குளம் மகளிர் கல்லூரியிலும் உயர் தரக் கல்வினை வவுனியா இந்துக் கல்லூரியிலும் கற்றுள்ளார்.

தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விளையாட்டு விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ கற்கை நெறியினை கற்று வரும் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்