கோட்டாபயவின் இறுதிவேலை ரணிலை பதவி விலக்குவதே – விடுக்கப்பட்ட அறிவிப்பு(காணொலி)

தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு முன்னர் தனது இறுதி வேலையாக ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குமாறு அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பதில் அரச அதிபராக பதவியேற்றால் நாட்டில் மேலும் போராட்டங்கள் வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை தான் பதவியிலிருந்து விலகுவது குறித்து ரணில் விக்கிரமசிங்க உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.https://twitter.com/i/status/1546887559115972608

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்