ஜனாதிபதி பதவிக்கான மும்முனைப் போர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஜூலை 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது
ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான மும்முனைப் போர் நடைபெற உள்ளதாக அறிய முடிகிறது .

1993 மே 1 இல் ஜனாதிபதி ஆர். பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி பதவி காலத்துக்கு முன்னரே வெற்றிடமாகியது.
தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவையடுத்து ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஜூலை 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவிறகு SLPP இன் ஒரு பகுதி அவருக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளது. SLPP இன் மற்றுமொரு தரப்பினர், பத்து கட்சிகள் கொண்ட கூட்டணி உட்பட அழகப்பெருமவை ஆதரிக்கின்றனர்.

செல்லுபடியாகும் வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேல் பெறும் வேட்பாளர்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார்கள். இதேவேளை நடுநிலையான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அடுத்த ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஜே.வி.பி எடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்