கோட்டாபய, பஷிலுக்கு நாம் உதவவில்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும்  பசில் ராஜபக்ச ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா ஆதரவளித்து உதவியதாக வெளியாகி வரும் செய்திகள் பொய்யானவை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் க்கத்தில் பதிலளித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளித்து வரும் என்பதை தொடர்ச்சியாக தெரிவித்து வருவதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும்  பசில் ராஜபக்ச ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறிய இந்தியா உதவியதாக வெளியான தகவலையடுத்தே இந்திய உயர்ஸ்தானிகராலயம் பதிலளித்துள்ளது.

காவியன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்