பதவி விலகல் விவகாரத்தில் மக்களை ஏமாற்றிய கோட்டாபய! பதற்றத்தில் தென்னிலங்கை

பதவி விலகல் விவகாரம்

சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இதுவரை சபாநாயகருக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் இது தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் தனது பதவியில் இருந்து விரைவில் விலக வேண்டும் என நாடாளுமன்ற அலுவல்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுவரை அனுப்பப்படாத பதவி விலகல் கடிதம்

 

பதவி விலகல் விவகாரத்தில் மக்களை ஏமாற்றிய கோட்டாபய! பதற்றத்தில் தென்னிலங்கை | Gotabaya Resignation Ranil Sri Lanka Politics

பதவி விலகல் கடிதத்தை நேற்று (13) நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் அனுப்பிவைப்பதாக கோட்டாபய தமக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததன் பிரகாரம் தாம் நாட்டிற்கு அறிவித்ததாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இதுவரை சபாநாயகருக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்