கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் போன்றவர்களுக்கு நிர்வாகம் தெரியாது – அரசாங்க பொது ஊழியர் சங்கம் வலியுறுத்து.

நூருல் ஹுதா உமர்

மூவின மக்களாலும் ஏற்று கொள்ளப்பட கூடிய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரே கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

அரசியல் நடப்புகள் தொடர்பாக வியாழக்கிழமை கல்முனையில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, வட – கிழக்கு மாகாணங்களுக்கு பரசூட்டுகளில் இருந்து ஆளுனர்களை இறங்கி கொண்டிருக்கின்றார்கள். இவ்விதம் இறக்குமதி செய்யப்படுகின்ற ஆளுனர்கள் எதற்கும் அருகதை அற்றவர்களாகவும் உள்ளனர். அந்த அந்த மாகாணங்களை சேர்ந்த பொருத்தமான நபர்களே வட கிழக்குக்கு ஆளுனர்களாக நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்குதான் எமது மக்களின் பிரச்சினைகள் தெரியும்,  புரியும். அவற்றை தீர்த்து தர அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள்.

கோத்தாபய ராஜபக்ஸவால் ஆளுனர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பதவிகள் உடனடியாக வெறிதாக்கப்பட்டு பொருத்தமான புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டும். கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் போன்றவர்களுக்கு நிர்வாகம் தெரியாது என்பது இன்னுமொரு விடயம். கிழக்கின் ஆளுனராக இதே மாகாணத்தை சேர்ந்த மூவின மக்களாலும் ஏற்று கொள்ளப்பட கூடிய ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.