நாவற்குழியில் 11வயதுச் சிறுவன் கடத்தப்பட்ட நிலையில் காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியைச் சேர்ந்த 11வயதுச் சிறுவன் ஒருவர் கடந்த 11/07 திங்கட்கிழமை மதியம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட நிலையில் அன்றிரவு காட்டுப் பகுதியில் ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
கடந்த திங்கட்கிழமை சிறுவனின் பெற்றோர் வேலைக்கு சென்ற சமயம் நாவற்குழி-ஐயனார் கோவில் பகுதியில் உள்ள பேர்த்தியார் வீட்டிற்கு சிறுவன் சென்றிருந்த நிலையி்ல் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதன் பின்னர் உறவினர்கள் இணைந்து சிறுவனை தேடிய போது அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்