நாடளாவிய ரீதியிலான பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் 21ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் தீர்மானம்

நாடளாவிய ரீதியிலான பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு! | Sri Lanka School Government Private Leave Ducation

 

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.