நிந்தவூர் ஆதார வைத்தியசாலை சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் !!

நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஊர் வைத்தியசாலை வீதியில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் துணை மருத்துவ சேவையாளர்கள் சுகாதார சேவையாளர்கள் அடங்கலாக பெருந்துகையானோர் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஏ. நஜீம் எடுத்துக்கொண்ட நடவடிக்கையின் பயனாக நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக இவர்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்