எரிபொருள் கப்பல்களின் வருகை குறித்து எரிசக்தி அமைச்சரின் அறிக்கை

 

-சி.எல்.சிசில்-

 

இன்று (16) வரவிருந்த முதல் தொகுதி டீசல் நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 

 

இது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அமைச்சர், டீசல் இருப்பு இன்று அதிகாலை கொழும்பு வந்தடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

 

தற்போது தர மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

மேலும், இன்று இரண்டாவது தொகுதி டீசல் வரும் என்றும், அதுவும் இந்த நடைமுறைப்படி சரிபார்க்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை ஜூலை 18-19ஆம் திகதிகளில் முதல் தொகுதி பெற்றோல் நாட்டுக்கு வரவுள்ளது.

 

மூன்று கப்பல்களுக்கும் தேவையான கொடுப்பனவுகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.