எரிபொருள் பாஸ் பெறுவது எப்படி?

-சி.எல்.சிசில்-

 

நாடு முழுவதற்குமான Digital எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

சகல வாகன உரிமையாளர்களும் தங்களது வாகனங்களுக்குரிய எரிபொருளை பெற்றுக் கொள்ள https://fuelpass.gov.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.

 

ஒரு தேசிய அடையாள அட்டை இலக்கத்துக்கு ஒரு வாகனம் என்ற ரீதியில் பதிவு செய்யப்படும்.

 

 

வாகன Chassis இலக்கம் மற்றும் ஏனைய விபரங்களை உறுதிப்படுத்த QR இலக்கம் ஒன்று ஒதுக்கப்படும்.

 

வாகனத்தின் கடைசி இரண்டு இலக்கங்களைப் பயன்படுத்தி வாரத்தின் இரண்டு நாட்கள் எரிபொருள் பெற்றுக் கொள்ள ஒதுக்கப்படும்.

அதற்கமைய,

 

01) வாராந்தம் உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும்.

 

02) ஒரு தேசிய அடையாள அட்டைக்கு ஒரு வாகனத்துக்கு எரிபொருள்.

 

03) வாகன அடிச்சட்ட இலக்கம் உள்ளிட்ட விபரங்கள் சரிபார்க்கப்பட்டு QR குறியீடு ஒதுக்கப்படும்.

 

04) வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தில் 2 நாட்களுக்கு எரிபொருள் விநியோகம்

 

உங்களுடைய விபரங்களை பதிவு செய்த பின்பு Registration Successful என திரையில் தோன்றும்.

 

அதில் உங்களுக்குரிய QR இலக்கம் மற்றும் வாராந்த ஒதுக்கீடு மற்றும் மிகுதி போன்ற விபரங்கள் காட்சிப்படுத்தப்படும்.

 

 

 

குறிப்பு– வாகன Chassis இலக்கம் உங்களது வாகன காப்புறுதி அட்டையிலும் பொறிக்கப்பட்டிருக்கும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.