அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து இலங்கைக்கு பெருமளவு மருந்துகள் நன்கொடை

அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து இலங்கைக்கு பெருமளவு மருந்துகள் நன்கொட

-சி.எல்.சிசில்-

 

இவ்வாறு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 32 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளில் முதல் பகுதியை இலங்கை பெற்றுள்ளதுடன், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் தலையீட்டின் மூலம் ‘ஹார்ட் டு ஹார்ட்’ என்ற சர்வதேச அமைப்புடன் இணைந்து இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

 

 

இலங்கை மக்களுக்கு சர்வதேச உதவிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் மிகவும் அவசியமான நிலையில், Heart to Heart என்ற சர்வதேச அமைப்பு காட்டிய அர்ப்பணிப்புக்காக இலங்கை மக்களும் தூதரகமும் அந்நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 

இந்த அமைப்பு இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்குவதாக நம்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.