எப்.எஸ்.கே மியன்டாட் பிரீமியர் லீக் சீசன் -2 ; இரண்டாவது தடவையாகவும் தொடர்  சாம்பியனானது பொலி லயன்ஸ் அணி !!

—-
(எம்.என்.எம்.அப்ராஸ் )
சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டு கழகத்தின்
“எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக்
சீசன் -2 (FSK MPL Season-II)கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் வெற்றி கிண்ணத்தை பொலி லயன்ஸ் அணி தனதாக்கி கொண்டது.
சாய்ந்தமருது  பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த (13)புதன்கிழமை ஆரம்பமான எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக்” சீசன் -2  சுற்றுத் தொடரின் இறுதி போட்டியானது பொலி லயன்ஸ் (Boli Lions)
மற்றும் மாளிகா யூனைடட் (Maliga United)ஆகிய அணிகளுக்கிடையே  சாய்ந்தமருது  பொது விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை(15)  இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பொலி லயன்ஸ்
(Boli Lions) அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததின் பிரகாரம் மட்டுப்படுத்தப்பட்ட 8 ஓவர்கள் கொண்ட குறித்த இறுதி  போட்டியில்
8 ஓவர்கள் முடிவில்2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 75 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாளிகா யூனைடட் (Maliga United) அணி 8 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள 10 ஓட்டங்களினால் பொலி லயன்ஸ் (BoliLions) அணியினர் வெற்றி பெற்று இரண்டாவது முறையாகவும் எப்.எஸ்.கே மியன்டாட் பிரீமியர் லீக் சீசன் -2 வின் தொடர் சம்பியனாக தெரிவானது.
இறுதி நாள் குறித்த கிரிக்கெட் சுற்றுத் தொடரானது  ஆலோசனை சபைத் தலைவர் எஸ்.எம்.அமீர் அவர்களின் தலைமையில் கழகத் தலைவர் ஏ.பாயிஸ், கழக தவிசாளரும் “எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக் (FSK )உரிமையாளருமான ஜே.எம்.காலித்,வர்த்தகரும் சமூக சேவையாளருமான எஸ்.பஸ்மீர்,அல்-அமானா நற்பனிமன்ற தலைவரும் சமூக சேவையாளருமான ஏ.எல்.பரீட் ஹாஜி, சுபிரி எட் நிறுவன பணிப்பாளர் எ.சஸ்ரின் ஜெஸாத், சாய்ந்தமருது பலநோக்கு கூற்டுறவு சங்க தலைவரும் ஓய்வு பெற்ற நிா்வாக உத்தியோகத்தருமான எம்.எம்.உதுமாலெவ்
வை,நான்கு அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் கழகத்தின் உயர் பீட உறுப்பினர்கள் அனைவரும் பிரதம அதிதிகளாக பங்கு பற்றுதலுடன் ஆரம்பமானது.
 இறுதி போட்டியின் ஆட்ட நாயகனாக Boli Lions அணியின் என்.எல்.எம்.சாஹிர்,தொடர் ஆட்ட நாயகனாக மருதூர் வோரியஸ் (Maruthoor Warriors)அணியின் எஸ்.எல்.மனாஸ்,தொடரின் அதி கூடிய ஓட்டங்களை பெற்றவராக மருதூர் வோரியஸ் (Maruthoor Warriors)அணியின் எஸ்.எல்.மனாஸ், தொடரின் அதி கூடிய விக்கெட்டுக்களை பெற்றவராக மாளிகா யூனைடட் (Maliga United) அணியின் ஏ.பி.எம்.பைஸால்,தொடரின் அதி கூடிய ஆறு ஓட்டங்களை பெற்றவராக சாந்தம் சலன்ஜேஸ் (Santham Challengers) அணியின் ஏ.எச்.எம்.முர்ஸித், தொடரின் அதி கூடிய நான்கு ஓட்டங்களை பெற்றவராக சாந்தம் சலன்ஜேஸ்
(SanthamChallengers)அணியின் யு.எல்.எம்.ஆஷிக், தொடரின் வளர்ந்து வரும் வீரராக சாந்தம் சலன்ஜேஸ் (Santham Challengers)அணியின் என்.எம்.ஹைஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு தொடரில் பங்கு கொண்ட நான்கு அணி வீரா்கள்,உரிமையாளர்கள்,
முகாமையாளர்கள்,அதிதிகள்,உயர்பீட உறுப்பினர்கள், நடுவர்கள், வர்ணணையாளர்கள், புள்ளிக்கணிப்பாளர்
கள்,கணனி வடிவமைப்பாளர்களுக்கு நினைவுச்
சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதே வேளை குறித்து சுற்றுத் தொடரில்
தந்தையும் மகனும் இரு அணிகளில் விளையாடியது
அனைவராலும் அங்கு வெகுவாகப் பேசப்பட்டமை சிறப்பம்சமாகும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தில்30 வருட வரலாற்றை கொண்ட சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டு கழகத்தில் விளையாடியமை முதன்
முறையாக சாய்ந்தமருது பிரதேசத்தில் வரலாற்றுப் பதிவாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.