காணாமல் போன துப்பாக்கி எங்கே ? ரணிலுக்கு அனுர சொன்ன பதில்

கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துள்ள விடயத்தை உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்தில் அறிவிக்க நேற்று (16 ம் திகதி) நாடாளுமன்றம் கூட்டப்பட்டதல்வா? இதில் பதில் ஜனாதிபதி ரணிலும் கலந்து கொண்டிருந்தார். பாராளுமன்ற அமர்வின் பின் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்த ரணில விக்கிரமசிங்க, சிரித்தப்படியே, கடந்த13 ம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் ஏற்பட்ட குழப்பநிலையின் போது இராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி காணாமல் போனதாக கூறப்படும் விடயம் தொடர்பில் வினவினாராம். “அந்த துப்பாக்கி எங்கே என அனுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்க, அனுரவும் சிரித்தப்படி, “அந்தத் துப்பாக்கி இருக்கும் இடம், என்னைவிட உங்களுக்கே நன்றாக தெரியும் என ” நச்” என பதிலளித்தாராம்.

 

காவியன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.