மட்டக்களப்பில் சூட்டுக்காயங்களுடன் இறந்த யானை மீட்பு!!

மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை பல்லாவிக் குளத்திற்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் நேற்று மாலை (16) திகதி மீட்கப்பட்டதாக, ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து
மட்டக்களப்பு மாவட்ட சுற்றுவட்டப்பொறுப்பாளர் ஏ.அப்துல் ஹலீம் தலைமையிலான அதிகாரிகளுடன் குறித்த இடத்திற்கு சென்று இறந்த யானையை மீட்டுள்ளனர்.
குறித்த  யானையின் உடம்பில் புரிய சூட்டுக் காயங்கள் காணப்படுவதுடன், குறித்த யானை இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையொன  வனஜீவராசி திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.