சஜித் பிரேமதாஸ தொடர் கலந்துரையாடல்களில்…

 

ஜூலை 20 ஆம் திகதி நடைபெறவுள்ள இடைகால ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அவர் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார்.

அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று (17ஆம் திகதி) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு தேவையான எதிர்கால செயற்பாடுகள் குறித்து நீண்ட நேரம் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

காவியன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்