வாசுதேவவின் ஆதரவு இவருக்கா..?

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு தாம் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார எம்.பி தெரிவித்துள்ளார்.

கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்தாமல், அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைந்து கொண்டு வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவும், மக்களுக்கு விரைவான நிவாரணங்களை வழங்குவதுடன் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படகூடிய திறமை பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு இருப்பதாக வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

காவியன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.