பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
சாவகச்சேரி நிருபர்
இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையினரால் அண்மையில் மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொண்டர் சபையின் தேசிய அமைப்பாளர் மற்றும் தேசிய கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை