இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ரணிலுக்கு ஆதரவு

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளன.

இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், கட்சி உறுப்பினர்கள் மற்றும் இ.தொ.காவுடன் இணைந்த தொழில் வல்லுனர்களுடன் நடத்திய கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்