இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபரைப் பொருட்படுத்தாமல், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

பத்து பேருக்கு மிகாமல் அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும் என கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், நாடு நெருக்கடியான கட்டத்தில் இருப்பதால் பொதுமக்களின் பல எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் தேவையில்லை எனவும், அடுத்த மூன்று வருட காலத்திற்கு குறைந்தபட்ச அமைச்சர்களை நியமிப்பதற்கு தாம் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை ஒருவரின் விளையாட்டு மைதானமாக மாற்ற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் போது அதன் பதவிக்காலம் ஆரம்பம் முதலே அறிவிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.