யாழ் கல்வியங்காடு  அம்மு அக்கூறிய விற்பனை நிலையத்தில் திருடன் கைவரிசை !!!

 

ஜூலை 20, 2022 – யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம்  கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள அம்மு அக்கூறியம் விற்பனை நிலையத்தில் நேற்றைய தினம் (19) திருடன் ஒருவன் விற்பனை நிலையத்தின் கூரையை பிரித்து உட்புகுந்து சிசிடிவி கேமராக்களை அவதானிப்பதையும், அதன் பிற்பாடு சிசிடிவி கேமராக்களை நிறுத்துவதும் மற்றைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது,
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள அம்மு அக்கூறியம் விற்பனை நிலையத்தின்  கூரையை பிரித்து உட்புகுந்து சிசிடிவி கேமராக்களை அவதானிப்பதையும், அதன் பிற்பாடு சிசிடிவி கேமராக்களை நிறுத்துவதும் மற்றைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது,
குறித்த விற்பனை நிலையத்தில் இந்த மாதத்தில் இரண்டாவது தடவையாக திருடன் தனது கைவரிசையை காட்டியதோடு பணத்தையும் திருடிச்சென்றுள்ளான்.
குறித்த சம்பவம் தொடர்பாக அம்மு அக்கூறியம் விற்பனை நிலையத்தின்  உரிமையாளரால் கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

(-தங்கராசா ஷாமிலன்.)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்