அரசை பொருட்படுத்தாமல் மக்களுக்காக உழைக்க வேண்டும் -மஹிந்த ராஜபக்க்ஷ

எந்த அரசாங்கத்தை நியமித்தாலும் மக்கள் பிரதிநிதிகள் நாட்டின் குடிமக்களுக்காக உழைக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய ஜனாதிபதி தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உருவாக்கப்படவுள்ள அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளைக் காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

யாரை நியமித்தாலும், நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஒரு தலைவர் தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்