இன்று 25% தனியார் பஸ்கள் சேவையில்

இன்று 25% ஆன பஸ்கள் இயக்கப்படும் என தனியார் பஸ் நடத்துநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் சில டிப்போக்களில் இருந்து குறைந்த அளவிலான எரிபொருளை பெற்றதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

பஸ்களை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர பஸ் உரிமையாளர்கள் முயற்சி எடுப்பார்கள் என அவர் உறுதியளித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ், தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் போக்குவரத்துக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கும், நடவடிக்கைகளை 50 வீதத்தால் அதிகரிப்பதற்கும் புதிய அரசாங்கம் தனியார் பஸ் நடத்துனர்களுக்கு உதவும் என அவர் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்