நுவரெலியாவில் மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் சுகாதார பரிசோதகர்களால் மீட்பு

டி.சந்ரு, செ.திவாகரன்)


நுவரெலியா நகரசபையின் நகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவினர் கடந்த செவ்வாய்க்கிழமை (11) மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையமொன்றில் திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர்.

 

 

 

இதன் போது வர்த்தக நிலையத்திலுள்ள மேல் மாடியில் அடைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத சுமார் 800 கிலோ எடையுள்ள உணவுப்பொருட்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாநகரசபையின் மாநகர சுகாதார பணிமனை அதிகாரிகளுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்ற பொருட்களின் தரம்,விலை,திகதி போன்றவை பரிசோதிக்கப்பட்டதுடன், மனித பாவனைக்கு உதவாத, காலாவதியான நிலையில் பிஸ்கட்டுகள் , போத்தலில் அடைக்கப்பட்ட பானங்கள், டின் மீன், நூடில்ஸ்,மிளகாய் என பல உணவுப் பொருட்கள் எலியின் எச்சம், சிறுநீருடன் கலந்த பெறுமதியான கைப்பற்றப்பட்டு வர்த்தக நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

நேற்று(21) வியாழக்கிழமை கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் பலசரக்குக் கடை உரிமையாளரை நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது முப்பது ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டு, மனித பாவனைக்கு உதவாத பொருட்களை உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.