ஏறாவூர், தாமரைக்கேணி நிஷாதினின் சுய முயற்சியால் றிக்சா வண்டிகள் கண்டுபிடிப்பு!!

(ஏறாவூர் நஸீர்)
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் எரிபொருளுக்காக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  நாட்கணக்கில் காத்திருந்தும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் வீடுதிரும்பிய சுயதொழிலாளியான ஏறாவூரைச் சேர்ந்த ஹச்சிமுகம்மது நிஷாத்,  தன்னாலும் முடியும் என்று, தன்னிடமிருந்த  பொருட்களைக் கொண்டு மூன்று றிக்சா வண்டிகளை வடிவமைத்து அவற்றை இன்று வெற்றிகரமாக இயக்கிக் காட்டியுள்ளார்.
உள்ளூர் பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளுக்கு செல்ல இந்த றிக்சாவை பயன்படுத்த முடியும்.
மேலும் மரக்கறி வியாபாரத்துக்கான றிக்சா வண்டி  மற்றும்
உணவுப்பண்டங்கள்  விற்பனைக்கான றிக்சா வண்டிகளையும் தயாரித்துள்ளார்.
தனது சுயமுயற்சியின் வெளியீட்டை காண பிரதேச  மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர்  அன்வர் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.முபாறக் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஐந்தாம் ஆண்டுவரை கல்விகற்ற  நிஷாத் வெதுப்பக தொழிலை செய்து வந்ததோடு,  சுயதேடலினால்  கணணி ஒன்றை தயாரிக்கும் திறனையும் கொண்டிருக்கிறார்.
இவரது கடின உழைப்புடன் கூடிய, பல்வேறு சுயதேடல்களையும் முயற்சியையும் அனைவரும் பாராட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தகது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.