நுணாவில் ஐ.ஓ.சியில் மதகுருமாருக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்

சாவகச்சேரி நிருபர்
நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 06/08 சனிக்கிழமை வடமாகாணத்தில் உள்ள மதகுருமார்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெற்றோல் வழங்கி வைக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் வை.சிவராசா அறியத்தந்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
சனிக்கிழமை நண்பகல் 12தொடக்கம் 1.30 மணிவரை வடமாகாணத்தில் உள்ள கத்தோலிக்க மதகுருமார்களுக்கும்,பிற்பகல் 2மணி தொடக்கம் 4.30 மணி வரை வடமாகாணத்தில் உள்ள இந்து மற்றும் ஏனைய மதகுருமார்களுக்கும் நுணாவில் ஐ.ஓ.சியில் முன்னுரிமை அடிப்படையில் பெற்றோல் வழங்கி வைக்கப்படும்.
அதேவேளையில் சனிக்கிழமை காலை 10மணி தொடக்கம் 12மணி வரை ஜே/311 தொடக்கம் ஜே/313 வரையான கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் QR முறைமையின் கீழ் பெற்றோல் விநியோகிக்கப்படும்.எரிபொருள் பெற வருபவர்கள் தமது பிரதேசத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினை கைவசம் வைத்திருக்க வேண்டுமெனவும் மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்