கொக்குவில் பொது சந்தையின் இறைச்சி மற்றும் மீன் விற்பனை தொகுதிக்கான அடிக்கல் இன்று நட்டு வைக்கப்பட்டது. External Inbox

உலக வங்கியின் நிதி உதவியில் மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள  கொக்குவில் பொது சந்தையின் இறைச்சி மற்றும் மீன் விற்பனை தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வானது இன்று (05)  மட்டக்களப்பு மாநகர சபையின் 3ஆம் வட்டார உறுப்பினர்  க.ரகுநாதன் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையானது, உலக வங்கியின் “உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் ஊடாக சுமார் 5 மில்லியன் ரூபாய் செலவில் நவீனமயப்படுத்தபட்ட வகையில் கொக்குவில் பொதுச் சந்தைக்கான இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை தொகுதியானது நிர்மாணிக்கப்படவுள்ளது.

உள்ளூர் வியாபாரிகளினதும், நுகர்வோரினதும் நன்மைகருதி நிர்மாணிக்கப்படவுள்ள மேற்படி விற்பனை தொகுதிக்கான அடிக்கல்லினை மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டு வைத்தார்.

இந் நிகழ்வின் விசேட அதிதியாக மாநகர ஆணையாளர் நா.மதிவண்ணன் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக மாநகர சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டு வைத்தனர்.

அத்துடன் கொக்குவில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள், ஆலய மற்றும் விளையாட்டு கழகங்களின் நிர்வாக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்