யாழ் கல்வியங்காடு, செங்குந்தா பொது சந்தை மரக்கறி வியாபாரிகள் அடைப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிப்பு.

 

யாழ்ப்பாணம், கல்வியங்காடு, செங்குந்தா சந்தை மரக்கறி வியாபாரிகள் கடந்த 10ஆம் திகதி ஆரம்பித்த அடைப்பு போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்துவந்த போராட்டம் இன்றோடு கைவிடப்பட்டதாகவும் நாளை (13) வழமை போன்று மரக்கறி சந்தை இயங்கும் என மரக்கறி வியாபாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சந்தைக்கு வெளியேயுள்ள பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் முன்னெடுக்கப்படும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரி தொடர் அடைப்பு   போராட்டத்தில் மரக்கறி வியாபாரிகள் ஈடுபட்டுதோடு இன்றையதினம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன் போது குறித்த விடையத்தை கவனத்திற்கு எடுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.வெதகெதர அவர்கள் மரக்கறி வியாபாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கியதோடு நாளை (13) வழமை போன்று வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார்.
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உறுதிமொழிக்கு மதிப்பளித்து போராட்டம்  கைவிடப்பட்டதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.

(-தங்கராசா ஷாமிலன்.)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்