சாய்ந்தமருதில் தொற்றா நோய்த் தடுப்புக்கான கேந்திர நிலையம்

நூருள் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று (12) வெள்ளிக்கிழமை கல்முனை சுகாதார பிராந்திய தொற்றா நோய்த்தடுப்புக்கான கேந்திர நிலையம் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம். தௌபீக் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ வாஜித் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம். மாஹிர் உள்ளிட்ட பிரிவுத்தலைவர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாக சாய்ந்தமருது பிரதேச வைத்திய அதிகாரி எம்.எச்.கே. சனூஸ் அவர்களினால்  இந்நிலையத்தின் பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று திறந்து வைக்கப்பட்ட இந்நிலையத்தின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளதுடன் இதற்கான விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் நிகழ்வில் கலந்து கொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கண் பரிசோதனைக்கான உபகரணங்களும் குளிரூட்டியும் ஒலிக்கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்