கிளிநொச்சி அக்கராயன் கிழக்கு மக்களின் தேவைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

அக்கராயன் கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் இன்று கிராம மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய கிராமமாக இருக்கின்ற குறித்த கிராமம் உள்ளது. இந்த சந்திப்பில் மக்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் நீண்ட காலமாக குறித்த கிராம மக்களால் பயிரிடப்பட்டு வந்த வயல்களில் சில காலமாக பயிரடப்பட முடியாமல் இருக்கும் காரணத்தையும் மீள் அந்த காணிகளை தமக்கு பெற்றுத்தருமாறும் கோரியிருந்தனர் குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தீர்வினைப் பெற்றுத்தருவதாவும் கூறியிருந்தார்.
இவ்விடயங்களுடன் குறித்த கிராமத்தில் மாணவர்கள் எதிர்நோக்கும் கல்வி மற்றும் உணவுத்தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் சமூகப்பிரழ்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்