பாடசாலைக்கு 80% வரவு தேவையில்லை

2022 டிசம்பரில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான 80% வருகையை கருத்தில் கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பை அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனத்தில் தொடர்வதற்காக 2017ஆம் ஆண்டு முதல் வட்டியில்லா கல்விக் கடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதேவேளை, 2019/2020 க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பிப்பதற்கான கால எல்லையை 19.08.2022 வரை நீடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.