பா.உ கலையரசனால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு…

(சுமன்)
அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்குடியாறு, நேருநகர் மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் நாட்டில் தற்போதைய பொருளாதார நிலையில் பாதிப்புற்றுள்ள குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க லண்டன் சிறுவர் வறுமை நிவாரண நிதியத்தின் நிதியுதவியின் மூலம் மேற்படி உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்