அம்பாறை சிங்கள மக்களினது மனங்களை வென்ற ரெலோ சர்வதேச அமைப்பின் நமக்காக நாம் திட்டம்

ரெலோ சர்வதேச அமைப்பின் நமக்காக நாம் வேலை திட்டம் அம்பாறையில் வாழ்கின்ற சிங்கள மக்களின் மனங்களை வென்று உள்ளது.
அம்பாறையில் மிக பின் தங்கிய வீரகெட திஸ்ஸபுர பிரதேச மக்கள் நமக்காக நாம் வேலை திட்டத்தின் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் சிந்தனையில் வீரகெட திஸ்ஸபுர ஸ்ரீ சுதர்சனாராம விகாரையில் வைத்து திங்கட்கிழமை உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
வீரகெட திஸ்ஸபுர ஸ்ரீ சுதர்சனாராம விகாராதிபதி திஸ்ஸானந்தபுர திஸ்ஸாநாம தேரர், கல்முனை ஸ்ரீ சுபத்திராராம விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரர், கல்முனை மாநகர சபையின் மற்றுமொரு உறுப்பினர் கதிரமலை செல்வராசா ஆகியோரின் பங்கேற்புடன் இவ்வைபவம் இடம்பெற்றது.
இதில் ராஜன்  தலைமையுரை ஆற்றியபோது நாட்டு மக்களை பட்டினி போட்ட காரணத்தாலேயே கோத்தாபய ராஜபக்ஸ நாட்டை விட்டு ஓடி ஜனாதிபதி பதவியை துறக்க நேர்ந்தது, பாதிக்கப்பட்ட மக்களின் சாபம் அவரை சும்மா விடாது, மூவின மக்களும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து நிம்மதியாக உணவு உண்டு வாழ கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்று பேசினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்