சஞ்சீவி” மாதர் பாரம்பரிய உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி நிருபர்
யாழ் மாவட்ட பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான “சஞ்சீவி” மாதர் பாரம்பரிய உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம் 12/08 வெள்ளிக்கிழமை பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மாவட்ட சமாசத்தின் உப செயலாளர் திருமதி சுமதி வசந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் ரா.சசீலன், மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சி.அஞ்சனாதேவி மற்றும் யாழ் மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.லேணுகாராணி ஆகியோர் கலந்து கொண்டு சஞ்சீவி விற்பனை நிலையத்தை திறந்து வைத்திருந்தனர்.
மேலும் நிகழ்வில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண இணைப்பாளர் கு.ரவிக்குமார்,மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் நா.பஞ்சலிங்கம்,பனை அபிவிருத்தித் திணைக்கள வடமாகாண முகாமையாளர் லோகநாதன், விழுது சமூக மேம்பாட்டு அமைய நிதி முகாமையாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.குறித்த “சஞ்சீவி” மாதர் பாரம்பரிய உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையமானது விழுது சமூக மேம்பாட்டு அமையம் மற்றும் அவுஸ்ரேலியன் எயிட் நிறுவனங்களின் நிதி அனுசரணையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.