புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பில் ஐ.தே.க -பொதுஜன முன்னணிக்கிடையில் குழப்பம்?

-சி.எல்.சிசில்-

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், பொதுஜன முன்னணிக்கும் இடையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய பலரை ஆளுநர்களாக நியமிக்கத் தீர்மானித்திருந்த போதிலும், ஆளுநர் பதவிகளுக்கு தனியான பெயர்களை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்வைத்துள்ளமையால் இந்தக் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ஜோன் அமரதுங்க, நவீன் திஸாநாயக்க மற்றும் வடமேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷாமல் செனரத் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆளுநர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தற்போது அந்தப் பதவிகளில் கடமையாற்றும் மூன்று ஆளுநர்களுக்கு அனுமதி வழங்குமாறு பொதுஜன முன்னணி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

லலித் யூ கமகே, விலி கமகே, ஏ.ஜே. முஸம்மில் ஆகியோரை ஆளுநர் பதவிகளில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.