அதிக விலைக்கு காரணம் கூறும் பிஸ்கட் உற்பத்தியாளர்கள்..

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட் மற்றும் பிற இனிப்பு வகைகளின் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் அதிக விலை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு காரணம் தெரிவித்துள்ளனர்.


டொலர் நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்திக்காக ‘ஏ’ தர கோதுமை மாவை இறக்குமதி செய்ததன் விளைவாக பல உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மே மாதம் கோதுமை மாவின் விலை ரூ. 74, தற்போது இதன் விலை ரூ. 290-300.”இது 277% விலை உயர்வு” என்று உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஊடகங்களிடையே உரையாற்றினர்.

டொலர் நெருக்கடியின் போது தரமான கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட தொகையே தமது உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்