தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலரின் அறிவுறுத்தல்!..

பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் அனைத்து அச்சுறுத்தல்களையும் முகங்கொடுப்பதற்கு இலங்கை அவதானமாக செயற்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் ஆராய்ச்சி கருத்தரங்கில் நேற்று (17) கலந்துகொண்டு றையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.

நாட்டின் பிரஜைகள் பொருளாதாரம் மற்றும் பிற நிறுவனங்களை பாதுகாப்பதானது அரசாங்கத்தின் திறனாகும்.

ஆயுத மற்றும் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமான கட்டுப்பாடற்ற மீன்பிடி, புவி வெப்பமடைதல் மற்றும் அதன் விளைவாக கடல் மட்ட உயர்வு, காலநிலை மாற்றம், அதிகரித்த கடல் மாசுபாடு மற்றும் கடல்சுற்றுச்சூழல் தாக்கம் உள்ளிட்ட விடயங்கள் இந்து சமுத்திரத்தில் இலங்கையின் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.