யா/மீசாலை விக்னேஸ்வர மகா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வும், மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு வழங்கும் நிகழ்வு

யா/மீசாலை விக்னேஸ்வர மகா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வும், மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்(17) இடம்பெற்றது.

இதன் போது மாணவர் உதவும் அறையும் திறந்து வைக்கப்பட்டதோடு, பாடசாலைக்கான வீட்டுத் தோட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப் பணிப்பாளர் நடராஜா காண்டீபன், சிறப்பு விருந்தினர்களாக பிரான்ஸ்- பழைய மாணவர் ஆசிரியர் சங்கத் தலைவர் என். ஜெகதீசன், திருமதி ஜெகதீசன், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சீர்திருத்த உத்தியோகத்தருமான ரஜனிகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு தேவையுடைய மாணவன் ஒருவருக்கு தூவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் 13 மாணவர்களுக்கு 5000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.