சாய்ந்தமருது வைத்திய சாலைக்கு வைத்திய உபகரணங்கள் கையளிப்பு

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு 2.5 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் தனியார் ஒருவரினால் நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பொது மக்களின் பங்களிப்பினை பெறுவது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களினாலும் வைத்தியசாலைகளினாலும் உதவிகள் கோரப்பட்டதற்கமைவாக டெலிகொம் பட்டயக்கணக்காளர் எம்.வை. இப்ராஹிம் அவர்கள் மர்ஹூம்களான தனது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக இவ்வுபகரணங்களை வழங்கி வைத்தார்.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி டொக்டர் சனூஸ் காரியப்பர் அவர்களினால் இணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும், அபிவிருத்திக்குழு பிரதிநிதிகளும், பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்